×

ஆயிரக்கணக்கான சதுர கி.மீட்டரை சீனாவிடம் ஒப்படைத்து விட்டீர்களா? பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடெல்லி: பிரதமர் மோடி அரசானது ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டரை சீனாவிடம் ஒப்படைத்துவிட்டதா? அல்லது பழைய நிலைக்கு திரும்ப முயற்சிக்கிறதா? என்று காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி இருக்கிறார். காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்,\”2020ம் ஆண்டு ஜூன்19ம் தேதியன்று கல்வானில் 20 வீரர்கள் உயிர்தியாகம் செய்தபிறகு நீங்கள் கொடுத்த அறிக்கையில்(இந்தியாவிற்குள் யாரும் நுழையவில்லை) உங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளதா? உங்கள் அரசானது டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனாவின் கட்டுப்பாட்டிற்கு ஒப்படைத்துவிட்டதா? அல்லது 2020ம் ஆண்டு மே5ம் தேதிக்கு முன்பிருந்த நிலைக்கு திரும்ப முயற்சிக்கிறீர்களா? 4 ஆண்டுகளில் 21 சுற்று ராணுவ பேச்சுவார்த்தைக்கு பின்னரும் நிலைமை சாதகமற்றதாகவே இருக்கிறது. லே பள்ளத்தாக்கின் காவல்துறை கண்காணிப்பாளர் 2020ம் ஆண்டு மே 5ம் தேதிக்கு முன்பிருந்த 65 ரோந்து பகுதிகளில் 26 இடங்களை அணுகமுடியவில்லை என்று தெளிவாக தெரிவித்துள்ளார்” என்றார்.

The post ஆயிரக்கணக்கான சதுர கி.மீட்டரை சீனாவிடம் ஒப்படைத்து விட்டீர்களா? பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : China ,Jairam Ramesh ,New Delhi ,PM ,Modi ,Congress ,General Secretary ,
× RELATED பிரதமர் மோடிக்கு விடை கொடுக்க மக்கள்...